Wednesday, November 24, 2010

குடும்ப அன்பை விட நம்மை அடிமையாகும் அக்டோபஸ் -முகநூல்


இன்றைய காலத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மிகக்கடினமாக இருக்கிறது. மனிதநேயம் தளர்ச்சியடைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது .

அன்று ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றி அறிய விரும்பினால் அவர் வாழும் கிராமத்தில் அல்லது அவருடைய வீதியில் வாழ்பவர் அல்லது அவரது அயலவர் அல்லது அந்நபரின் நெருங்கிய உறவினர்களிடமோ தொடர்புகொண்டால் தவிர அவரைப் பற்றிய தகவல்களை அறிவது மிகவும் கடினமாயிருந்த காலத்தையெல்லாம் நாம் கடந்து விட்டோம்.  தபால் தொலைத் தொடர்பு அறிமுகமானதன் பின்னர் கடிதத் தொடர்புகள் மூலமும் தொலைபேசி, தொலைநகல் அறிமுகமானதன் பின் கடிதத் தொடர்பைவிடத் துரிதமாகவும் தகவல்களைப் பெற்றனர். இணையத்தின் அறிமுகத்துடன், மின்னஞ்சல் மூலம் ஓரிரு விநாடிகளிலேயே தகவல்கள் பரிமாற்றப்பட்டன. 
இன்று இவற்றை எல்லாம் தாண்டித் தகவல் பரிமாற்றத்துக்கான மிகவும் இலகுவான, எளிமையான முறையாக சமூக வலைப்பின்னல் முறைமை விளங்குகிறது. இம்முறைமை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிவதற்கும் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் உதவுகிறது.

தொடர்பற்றுப் போன உறவுகளுடனும் சிறுவயது நண்பர்களுடனும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முகநூல் உதவுகிறது. ஒரு பொழுது போக்குக்காகவும் இயந்திரமயப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தப்படும் மனச் சோர்வைப் போக்கவும் முகநூல் பயன்படுகிறது. கைத்தொலைபேசிகளினூடாகவும் இத்தளத்தைப் பார்வையிட முடிவதுடன் பதிவுகளையேற்றவும் முடிகிறது. 
புகைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்களைப் பகிரவும், சேமிக்கவும் சிறந்த தளமாக முகநூல் அமைகிறது. உலகின் எந்த அந்தத்திலிருந்தாலும் ஒருவர் தொடர்பான விடயங்களை உடனுக்குடன் அறியவும் தொடர்புகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இத்தளம் உலகில் பிரபலமான பல மொழிகளிலே காணப்படுவதால், இத்தளத்தை உபயோகிக்க ஆங்கில மொழியறிவு அவசியமில்லை. இணைய அறிவு மட்டுமே போதுமானது. 


 நவநாகரிக மோகத்தினால் விட்டுச் செல்லப்பட்ட பல விடயங்களை, மாய உலகொன்றைத் தோற்றுவித்து, விளையாட்டுக்களின் மூலம் கண்முன்னே கொண்டு வருவதில் முகநூல் முன்னணியில் திகழ்கிறது. அறிவை விருத்தி செய்யக்கூடிய பல விளையாட்டுக்களையும் முகநூல் கொண்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பெருமைகொள்வோர் தாமாகவே ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொள்கின்றனர். முகநூல் நட்புக்குப் புதியதோர் வரைவிலக்கணத்தை வழங்கிவிடுமோ என்றதோர் அச்சமும் நிலவி வருகிறது. 
முகநூலினூடாகப் பாவனையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டமைக்காக முகநூல் பாவனையைத் தடைசெய்த நாடுகளுமுள்ளன. சிரியா, பர்மா, பூட்டான், ஈரான், வியட்நாம் போன்ற நாடுகளே இவ்வாறு தடைசெய்துள்ளன. 
முகநூல் தளம், தானே பலவகையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் துஷ்பிரயோகங்களை இயன்றவரை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளை எவ்வளவு தூரம் முகநூல் பாவனையிலீடுபடுகின்றதென்பதை அவதானிக்க வேண்டும். பாவனையாளர் ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் செயற்பட வேண்டும். 



குடும்பத்தைப் பொருத்தவரை, அது சுருங்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. என்றாலும், படிப்பு, அறிவு, தெளிவு, பழக்கம், விஷய ஞானம், வெளிநாட்டைப் பற்றிய அறிவு ஆகியவற்றைப் பொருத்தவரை அதிகமாகப் பெறும் வாய்ப்புகள் உற்பத்தியானபடி இருக்கின்றன. குடும்பங்கள் சீரழிய உதவக்கூடிய சில வாய்ப்புகளும் உற்பத்தியாகிக் கொண்டேயிருந்தாலும், குடும்பப் பண்பை உயர்த்த முயல்பவர்களுக்கு உதவியாகப் பல புதிய சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கல்வி  நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிப்பதுபோல் அன்பை  ஏற்றுக்கொண்டவர்கள் செய்யும் காரியங்களின் உயர்வும் வெற்றியும், அவருடைய உழைப்பால் நிர்ணயிக்கப்படும். குமாஸ்தாவாகப் போய், பி டி ஒ .வாக ரிடையர் ஆகிறவரும், கலெக்டராக ரிடையர் ஆகிறவரும் பெற்ற பட்டம் ஒன்றே. தரம் வேறு. வாழ்வு அனைவருக்கும் ஒன்றே என்றாலும், அன்பு  அவர்கள் வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொடுப்பதால், அவர்கள் குடும்பத்தின் பண்பை உயர்த்த முடியும் , பலன் எதிர்பாராத அளவில் அன்பு குடும்பத்தின் தரத்தை உயர்த்தும் .
  • பொதுவான பொறுப்புகளைத் தானே முன் வந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.
  • ஒரு வசதியை ஏற்படுத்தும் பொழுது மற்றவர் களுக்கெல்லாம் கிடைத்த பின்னரே தாம் பெறலாம் என்ற நோக்கம்.
  • குடும்பத்தில் எவருடைய குறையையும், மற்றவர்கள் பொருட்படுத்தாத நிலை.
  • பலருடைய சந்தோஷத்திற்காக அவர் விரும்பும் நல்ல காரியங்களை அவர் எவ்வளவு ஆர்வமாக நாடுவாரோ, அவ்வளவு உற்சாகத்தோட அவருக்காக அதைப் பெற்றுத் தரும் மனநிலை.
  • ஒரு காரியம் செய்யலாமா எனும் பொழுது மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று யோசனை செய்த பிறகு செய்வது.
  • குடும்பத்திற்காக நான் உழைக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றாமலிருப்பது.
நாம் செய்யும் முயற்சிகள் நல்ல முறையில் உள்ளன என்பதற்குச் சில அடையாளங்களுண்டு. வாழ்க்கையில் எங்குத் தோற்றாலும், சலிப்படைந்தாலும், வீட்டிற்குள் வந்தவுடன் அவற்றை மறந்து சந்தோஷம் அடைந்தால், குடும்பம் நல்ல முறையில் இருக்கிறது என்று பொருள். வீட்டில் உள்ள சந்தோஷம் அங்குள்ள வசதியைப் பொருத்தில்லாமல் மனிதர்களைக் பொருத்து மட்டும் இருந்தால் வீடு, குடும்பமாகிவிட்டது என்று பொருள். 
முன்னேற்றத்திற்கு பல்வேறு மூலதளங்கள் என்றால் அவற்றுக்கெல்லாம் அடித்தளமாக இருக்கக்கூடியது மனிதநேயமாகும். ஆப்படி என்றால் மனிதநேயம் என்றால் என்ன? என்றக் கேள்வி எழுகிறதல்லவா?
சகமனிதர்களை நேசிக்கின்ற மாண்பு சகமனிதனை மனிதனாகப் பார்க்கின்ற அணுகுமுறை தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும் தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும் என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கின்ற தன்மை சகமனிதனைப் பாசத்தோடும் பரிவோடும் கருணையோடும் நோக்கும் அன்புநிலையே மனிதநேயம்.
இன்று மனிதநேயம் 

உண்மையில் விஞ்ஞானத்தால் நாம் பயன் அடைகிறோமா அல்லது அமைதியை இழந்து உழைப்பை இழந்து வீரத்தை இழந்து இயற்கையை இழந்து உறவுகளை இழந்து பண்பாட்டை இழந்து பாரம்பரியத்தை இழந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.
ஆம் , இன்று அலைபேசி , ஓர்குட் , வலைபதிவு ,முகநூலின் நண்பர்களுக்கு தரும் முக்கியத்துவம் நம்மை குடும்பத்திற்கும் பெற்ற தாய் தந்தையர்க்கும் சகோதர சகோதரிகளுக்கும் கொடுகிறோமா என்பதை சற்று எண்ணி பார்க்கவேண்டும் , நம் குடும்பம் , நம் சொந்தம் , நம்தெருவர் , நம்ம உர்காரர் , என்றும் நம் மனதை சற்று திருப்பவேண்டும். இவர்களுக்கு  பதில் சொல்வதைவிட, முகநூலில் பின்னுட்டம் இடுவதிலிம் பதில் அளிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தோன்றுகிறது .ஒரு கவிஞன் சொன்னான் "இன்று காதலிக்கு கொடுக்கும் முத்தங்களை விட அலைபேசிக்கு கொடுக்கும் முத்தங்கள் தான் அதிகம் என்று. ஒரு பழமொழி  உண்டு - உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. இன்று நான் கண்கூடக பார்க்கும் சில நிகழ்வுகள் , கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தங்கள் 
சொந்தங்களை கண்டாலே கொஞ்சம் கடுபுத்தான் , உறவுகளின் நல்லது, கெட்டதறக்கு கூட போக பிடிப்பதில்லை , சில சமயங்களில் பெற்றோரை அழைத்து செல்ல நேர்ந்தாலும் அங்கு உறவுகளுடனான உரையாடல் மிகவும் குறைவுதான் .

  
கற்காலம்,  வெண்கலக்காலம் என்றெல்லாம் காலங்கள் வரையறுக்கப்படுகின்ற போது இணையக் காலமொன்று வரையறுக்கப்படுகையில் அதன் உப பிரிவுகளிலொன்றாக முகநூல் காலமும் இருக்குமென்பதில் எதுவித ஐயமுமில்லை. 
கனியிருப்பக்காய் கவர்ந்தற்று என்ற முதுமொழியின் அர்த்தத்தை ஆழ உணர்ந்து முகநூலைப் பாவிப்பதுடன் அதன் ஆதிக்கத்தை ஓங்க விடாது, அதை எமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தால், அதிகம் நன்மை பயக்கும் தளமாகவே முக நூலுமிருக்கும்.

 மதுவுக்கடிமை, போதைப்பொருளுக்கு அடிமை என்ற காலங்கள் கடந்து முகநூலுக்கடிமை என்றொரு காலம் வெகு விரைவில் உருவாகுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. மாய உலகில் சஞ்சரிப்பது இன்பமாகத் தோன்றினாலும் உளரீதியான ஆரோக்கியத்துக்கு அது ஒரு போதும் நன்மை பயக்காது. 

விஞ்ஞானத்தால் இன்று மனிதன் உச்சத்தில் வளர்ந்திருக்கிறான் என்பது நிச்சயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மைதான். ஆனால், விஞ்ஞானம் வளர வளர மனிதன் மூளையை மட்டுமே பயன்படுத்தினால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட கூடாதுதல்லவா ?

1 comment:

  1. //மாய உலகில் சஞ்சரிப்பது இன்பமாகத் தோன்றினாலும் உளரீதியான ஆரோக்கியத்துக்கு அது ஒரு போதும் நன்மை பயக்காது. //

    உண்மை தான் சகோ..

    தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete