Friday, November 12, 2010

ஸ்பெக்ட்ரம் பற்றி பிரதமர் கூறியுள்ளாரே!


ஸ்பெக்ட்ரம்பற்றி  பிரதமர் கூறியுள்ளாரே!

பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவையொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசாரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்!
அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது.
முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை.
அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான அறிவுபூர்வமான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

தேவையில்லாத வேலை
இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள் பா.ஜ.க., அ.தி.மு.க., இடது சாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது!
இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவரமில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்!
ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் 
அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்றமடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

1 comment:

  1. It has to enquired when Pramodh Mahajan was in Telecom minister. At that period only two networks are allowed to market for e.g tamil nadu except chennai , aircel and Bpl, for chennai RPG and sky. Like that for all states !From 3g auction thru Raja , Indian govt. earned more than a lakh crores. Everybody forget it. If enquiry been ordered, it should be from 2001 BJP goverment. Some years back Kumudam reporter put a cover story of more than 10000 crore in telecom industry under pramodh mahajan. Just get the magazine and publish it!

    ReplyDelete